நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 10, 2019
தேசிய செய்திகள்
1. வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசமைப்புச் சட்டத்தின் 371-வது பிரிவு ரத்து செய்யப்பட மாட்டாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்தார்.
2. புதுடில்லியில் நடைபெற்ற தேசிய இளைஞர் உச்சி மாநாடு 2019 ஐ இந்திய ஜனாதிபதி ஸ்ரீ ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்துள்ளார்.
3. ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் ரகசியமாக கணக்கு வைத்துள்ள இந்தியர்களின் விவரங்களை அந்நாட்டு அரசு தயாரித்துள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த வர்த்தகர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் ஆகியோரின் பெயர்கள் அதிகம் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
4. தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்றுக்கொண்டார்.
முக்கிய தினங்கள்
5. செப்டம்பர் 8 - சர்வதேச எழுத்தறிவு தினம். இதன் கருத்துரு ‘கல்வியறிவு மற்றும் பன்மொழி’
Comments
Post a Comment