நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 30, 2019




உலக செய்திகள்

1. அமெரிக்க பாடகரும் பாடலாசிரியருமான டெய்லர் ஸ்விஃப்ட் ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் ‘இசையில் அதிக சம்பளம் வாங்கும் பெண்’ பிரிவில் 2019ஆம் ஆண்டில் 185 மில்லியன் டாலர் வருவாயுடன் முதலிடத்தில் உள்ளார்.

தேசிய செய்திகள்

2. நிலவின் பரப்பில் சந்திரயான்-2 விண்கலம் தரையிறங்க உள்ள நிலையில், நிலவுப் பகுதியில் அதன் நீள்வட்டப்பாதையை குறைக்கும் நடவடிக்கையை இந்திய விண்வெளி ஆய்வு மைய (இஸ்ரோ) விஞ்ஞானிகள் புதன்கிழமை வெற்றிகரமாக மேற்கொண்டனர்.

3. சமீபத்தில் கொடைக்கானல் மலைப்பூண்டு, திண்டுக்கல் பஞ்சாமிர்தம், ஈரோடு மஞ்சள் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்ட நிலையில், தற்போது சேலம் மாம்பழம், ஓசூர் ரோஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, திண்டுக்கல் பூட்டு, ராஜபாளையம் நாய், காரைக்குடி கண்டாங்கி சேலை, கோடாலிகருப்பூர் சேவை ஆகிய 7 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பதிவு கிடைத்துள்ளது.

4. “புதிய தேசிய சைபர் பாதுகாப்பு வியூகத்தை நோக்கி” (Towards New National Cyber Security Strategy””) என்ற தலைப்பில் 12வது இந்திய பாதுகாப்பு உச்சி மாநாடு டெல்லியில் நடைபெற்றது.

5. இந்தியா உலகின் முதல் பயோமெட்ரிக் கடற்படை அடையாள ஆவணத்தை (Biomertic Seafarer Identity Document (BSID)) அறிமுகப்படுத்தியது.

6. மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்களுக்கான அமைச்சர் ஸ்ரீ டி.வி. சதானந்த கவுடா புது தில்லியில், “ஜானுஷாதியின் சுகம்”(Janaushadhi Sugam) என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தினார்.




Comments

Popular posts from this blog

RMRCNE Recruitment 2019 04 Project Technician Posts

IACS Recruitment 2019 93 MTS, TA Posts

Indian Army Recruitment 2019 20 Havildar Posts